உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதி கண்ணம்மா தொடருக்காக நிறைய இழந்திருக்கேன் - கண்மணி மனோகரன்

பாரதி கண்ணம்மா தொடருக்காக நிறைய இழந்திருக்கேன் - கண்மணி மனோகரன்

பிரபல மாடலான கண்மணி மனோகரன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையானார். அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வந்த கண்மணி சமீபத்தில் தொடரை விட்டு விலகினார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் அவர், 'பாரதி கண்ணம்மாவின் அஞ்சலி கேரக்டரை ரொம்பவே மிஸ் பன்றேன். அந்த கேரக்டர் தான் நடிகையாக எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. அஞ்சலி கேரக்டருக்காக நிறைய இழந்திருக்கேன். நான் எப்போதுமே ஒரு நேரத்தில ஒரு ப்ராஜெக்ட் எடுத்து என்னோட 100 சதவீத உழைப்பை கொடுப்பேன். அதனால, பல வாய்ப்புகள் கிடைச்சும் அத பயன்படுத்திக்க முடியாம போச்சு. அஞ்சலியா மூனு வருஷம் கடந்தாச்சு. இனி அடுத்த கட்டத்துக்கு போக முடிவு பண்ணேன். அதுக்காக தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறினேன்' என்று கூறியுள்ளார்.

இரண்டாம் கதாநாயகியான அஞ்சலி கதாபாத்திரம் ஆரம்பத்தில் கண்ணம்மா எதிரான வில்லி கதாபாத்திரமாக கலக்கி வந்தது. வெண்பா என்ற புதிய வில்லி வந்தவுடன் அஞ்சலி கதாபாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்தது. இந்நிலையில் தான் கண்மணி மனோகரன் சீரியலை விட்டு வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழ் டிவியின் புது சீரியலில் கதநாயகியாக நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !