சென்னையில் புது வீட்டில் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்
ADDED : 1322 days ago
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது புதிய வீட்டிற்கு இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், நடிகர் உதயநிதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது புதிய வீட்டில் நடந்த கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் .