மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1311 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1311 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1311 days ago
மம்முட்டி நடிப்பில் மிகவும் பிரபலமான சிபிஐ பட வரிசையில் தற்போது அதன் ஐந்தாம் பாகமாக 'சிபிஐ 5 : தி பிரைன்' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஐந்து பாகங்களிலும் இயக்குனர் மது, கதாசிரியர் எஸ்என்.சுவாமி, ஹீரோ மம்முட்டி என மூவரும் தொடர்கின்றனர். அதைவிட ஆச்சரியம் இந்த நான்கு பாகங்களிலும் நடித்த நடிகர் முகேஷ் இந்த படத்தில் மீண்டும் இடம் பெறுகிறார்..
அதேசமயம் முந்தைய நான்கு பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் இந்த படத்தில் இடம் பெறுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் ஏற்பட்டது. காரணம் சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கிய ஜெகதி ஸ்ரீகுமார் அதன்பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார். பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்ள அவரது உடல்நிலை பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அதனால் தான் இந்த ஐந்தாம் பாகத்தில் அவரிடம் பெறுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐந்தாம் பாகத்திலும் அவர் தனது கதாபாத்திரத்தில் தொடர்கிறார் என்கிற சந்தோஷ செய்தியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படப்பிடிப்பின்போது ஜெகதி ஸ்ரீகுமாருடன் மம்முட்டி, இயக்குனர் மது, கதாசிரியரின் எஸ்.என்.சுவாமி மற்றும் கதாசிரியரும் இயக்குனருமான ரெஞ்சி பணிக்கர் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இதனால் ஜெகதி ஸ்ரீகுமாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
1311 days ago
1311 days ago
1311 days ago