மும்பையில் மகள்களுடன் வலிமை படம் பார்த்த போனிகபூர்
ADDED : 1312 days ago
ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் கடந்த சில வருடங்களாகவே தென்னிந்தியத் திரையுலகின் பக்கம் தனது கவனத்தை திருப்பி படங்களை தயாரித்து வருகிறார்.. அந்தவகையில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த கையோடு, அடுத்ததாக இயக்குனர் வினோத், அஜித் கூட்டணியில் மீண்டும் வலிமை படத்தை தயாரித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. இந்த படத்தை முதல் நாளன்று சென்னையில் உள்ள திரையரங்குகளில் படத்தின் நாயகி ஹூமா குரோஷி, வில்லன் கார்த்திகேயா ஆகியோருடன் பார்த்து ரசித்தார் போனிகபூர்.
இந்தநிலையில் மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தனது மூன்று மகள்களுடன் சென்று வலிமை திரைப்படம் பார்த்துள்ளார் போனிகபூர். இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.