தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள்
ADDED : 2 minutes ago
தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். கேஜிஎப் 2 படம் மூலமாக மீண்டும் பிஸியாக மாறியுள்ள ரவீனா டாண்டன் தற்போது தமிழில் சூர்யா மற்றும் விஜய் ஆண்டனி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் ராஷா தடானி ஏற்கனவே ஹிந்தியில் அறிமுகமாகி ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது முதன்முறையாக தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மகேஷ் பாபுவின் சகோதரர் மகனும் நடிகர் கிருஷ்ணாவின் பேரனுமான ஜெய கிருஷ்ணா கட்டமனேனி இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆர்எக்ஸ் 100, மகா சமுத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் பூபதி இந்த படத்தை இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஷா தடானியின் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது..