விஜய்யின் 'பீஸ்ட்' பட புகைப்படங்கள் லீக் : படக்குழுவினர் அதிர்ச்சி
ADDED : 1453 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி படத்தின் மீது அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் இப்படத்தின் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் படத்தின் எடிட்டிங் செய்யும் பொது எடுக்கப்பட்டவை என கூறப்படுகிறது .