உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 61வது படத்தில் ஹீரோ - வில்லனாக நடிக்கும் அஜித்

61வது படத்தில் ஹீரோ - வில்லனாக நடிக்கும் அஜித்

நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தையும் இயக்குகிறார் வினோத். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் பிரகாஷ்ராஜ், கவின், தபு உள்ளிட்ட பலர் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் வினோத் அளித்துள்ள ஒரு பேட்டியில், அஜித்தின் 61வது படத்தில் ஹீரோவும் அவரே வில்லனும் அவரே என்று கூறி இருக்கிறார்.

அப்படி என்றால் வாலி படத்தை போன்று இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா அஜித்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ஹீரோ, வில்லன் இரண்டுமே அவர் தான் என்று சொல்லி அஜித்தின் 61ஆவது படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டுள்ளார் வினோத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !