உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே மாதம் வெளியாகும் கார்த்தியின் விருமன்

மே மாதம் வெளியாகும் கார்த்தியின் விருமன்

கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது இவரின் முதல் படமாகும். பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற மே மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !