லியோனி மகன் படத்தில் விஜய்சேதுபதி, பிரபு சாலமன்
ADDED : 1373 days ago
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார். இவர் அழகிய கண்ணே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இதனை எஸ்தல் எண்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
லியோ சிவக்குமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதியும், இயக்குநர் பிரபுசாலமனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது.