கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யும் காஜல் அகர்வால்
ADDED : 1327 days ago
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ல் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தான் ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து காஜல் விலகிவிட்டார். கர்ப்ப காலத்தில் தாய்மை பற்றி உணர்வுகளையும், அதன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார் காஜல். சமீபத்தில் இவரது வளைகாப்பு நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் தான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் காஜல். அதில் கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சியை அது சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் உதவியுடன் செய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.