உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நானே வருவேன் படத்தை துவங்கும் தனுஷ்

மீண்டும் நானே வருவேன் படத்தை துவங்கும் தனுஷ்

தனுஷின் நேரடி தெலுங்கு படமான வாத்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது . நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் தனுஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்நிலையில் மார்ச் முதல் வார இறுதியில் செல்வராகவன் இயக்கி வரும் நானே வருவேன் படத்தில் மீண்டும் தனுஷ் இணைந்து நடிக்க உள்ளார். இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார் . யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது .இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 15 நாட்களுக்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !