பாலா இயக்கத்தில் இணையும் சூர்யா - ஜோதிகா
ADDED : 1396 days ago
சூர்யா - ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த ஜோதிகா மீண்டும் படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிப்பதோடு, அதை தயாரிக்கவும் உள்ளார். இதில் ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏற்கனவே 2018ல் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.