சிம்புதேவன் படத்தில் நடிக்கும் யோகி பாபு
ADDED : 1396 days ago
வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை இயக்கியவர் சிம்புதேவன். அதன் பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கினார். பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் மீண்டும் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் இருபத்தி நான்காம் புலிகேசி படத்தை தொடங்கினார். ஆனால் படம் தொடங்கப்பட்ட சில நாட்களில் வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதை அடுத்து அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பல வருடங்களுக்கு பிறகு கசடதபற என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன் தற்போது யோகிபாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இந்தப் படம் மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.