காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜா ஹெக்டே
ADDED : 1395 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. அதோடு, சிரஞ்சீவியுடன் ஆச்சாரியா, பிரபாசுடன் ராதே ஷ்யாம் போன்ற படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த சிவராத்திரி விழாவை கொண்டாட காசிக்கு சென்று அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபட்டுள்ளார் பூஜா ஹெக்டே. அது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ள பூஜா ஹெக்டே, ‛‛கனவு நனவாக நாம் நினைப்பதெல்லாம் நடப்பதற்கு சிவனை வழிபடுவோம். ஓம் நமச்சிவாயா'' என்று பதிவிட்டுள்ளார்.