கதிருக்கு ஜோடியாக நடிக்கும் யுவலட்சுமி
ADDED : 1429 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த கதிர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ். எல். எஸ் ஹென்றி இயக்கத்தில் 'இயல்வது கரவேல்' படத்தில் கதிர் கதாநாயகனாகன் நடிக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அப்பா, அம்மா கணக்கு , காஞ்சனா-3 போன்ற படங்களில் நடித்த யுவலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கமாஸ்டர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எமிநெட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்றது. புதுச்சேரி , வடசென்னை ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது .