மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அனுஷ்கா
ADDED : 1314 days ago
நிசப்தம் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் தற்போது தமிழில் ஏ. எல் .விஜய் இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான தலைவி படத்தை போன்று இந்த படத்தையும் அனுஷ்கா நடிப்பில் ஹீரோயினை மையமாக கொண்ட கதையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக தற்போது அனுஷ்கா வெயிட் குறைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். இதற்கு விக்ரமை வைத்து விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் அனுஷ்கா நடித்தது குறிப்பிடத்தக்கது.