மாலத்தீவில் காச்சா பாதம் பாடலுக்கு ஆட்டம் போட்ட சாந்தனு - கீர்த்தி
ADDED : 1330 days ago
இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. சினிமாவில் நடித்து வரும் இவர் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனு அதையடுத்து முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் நடித்தார். இப்போது ஓரிரு படங்களில் நடிக்கிறார். தனது மனைவி கீர்த்தியுடன் இணைந்து அவ்வப்போது ஹிட் பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை தொடர்ந்து அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். தற்போது சாந்தனு - கீர்த்தி தம்பதி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்கள். அங்கு உலகம் முழுக்க டிரெண்ட் ஆகி வரும் காச்சா பாதம் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.