ஆர்.ஜே.பாலாஜியுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1311 days ago
'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கி, நடித்த ஆர்.ஜே.பாலாஜி தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆர்.ஜே பாலாஜி அடுத்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளளது. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. வருகிற மார்ச் 23-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது .