உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷின் “தீயவர் குலைகள் நடுங்க”

அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷின் “தீயவர் குலைகள் நடுங்க”

நடிகர் அர்ஜூன், நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு தீயவர் குலைகள் நடுங்க என பெயரிட்டுள்ளனர். இவர்களுடன் ராம்குமார் சிவாஜிகணேசன், ஜிகே.ரெட்டி, பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இந்த படத்தை தினேஷ் லெட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட் சார்பில் அருள் குமார் தயாரிக்கிறார்.

கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. அதனை விசாரிக்கும் பின்னணியில் அழுத்தமான க்ரைம், த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரம் மைய கதாப்பாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. பரத் ஆசீவகன் (இசை), லாரன்ஸ் கிஷோர் (எடிட்டர்), சரவணன் அபிமன்யு (ஒளிப்பதிவாளர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !