கேப்ரில்லாவின் புது முயற்சி
ADDED : 1312 days ago
'சுந்தரி' தொடரில் கதாநாயகியாக கேப்ரில்லா செல்லஸ் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடர் ரசிகர்ளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட கேப்ரில்லா தற்போது 'கருப்பழகி தியேட்டர் பேக்டரி' என்ற நாடக் குழுவை தொடங்கியுள்ளார்.
டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் 'மைம்' வகை நடிப்பில் கேப்ரில்லா அடிக்கடி சிறப்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய நாடக் குழுவின் மூலம் தனது கனவு நாடகமான மெளன நாடகத்தை அரங்கேற்றும் வகையில் முயற்சி செய்து வருகிறார். அவரது இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்களும், சில திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.