இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்யகிறாரா...? - உண்மை என்ன
ADDED : 1342 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இமான். கடந்தாண்டு தேசிய விருதும் வென்றுள்ள இவர் சமீபத்தில் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததாக அறிவித்தார். மேலும் தனிப்பட்ட எங்களின் விருப்பத்திற்கு அனைவரும் மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார் இமான். தற்போது படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார் இமான்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த உமா என்ற பெண்ணை இமான் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுப்பற்றி இமானின் தந்தை டேவிட் நம்மிடம் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையில்லை. எந்த விஷயத்தையும் இமான் வெளிப்படையாக சொல்பவர். விவாகரத்து நடந்தது அதை பற்றி சொன்னார். அதுபோல் திருமணம் நடந்தால் நிச்சயம் இமானே சொல்வார். கடவுள் இருக்கிறார், நல்லதே நடக்கும்'' என்றார்.