புதுமுகங்களின் நண்பா
ADDED : 1308 days ago
புதுமுகங்கள் பிரபு - மீனா ஆகியோருடன் கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி , கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடிக்கும் படம் நண்பா. சிவஞானம் புரொடக்ஷன் சார்பில் டி.சிவபெருமாள் தயாரிக்கிறார். ஜெயம் ஒளிப்பதிவையும், டென்னிஸ் வல்லபன் இசையையும், கவனிக்கிறார்கள்.
கே.வி. முகி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இணைபிரியா மூன்று நண்பர்கள் சாதியை தாண்டி , மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா? என்பதுதான் படம். என்றார்.