ஆபாசம் இருக்காது - ரகுல் பிரீத் சிங்
ADDED : 1342 days ago
தமிழில் அயலான், இந்தியன்- 2 படங்களில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங், தெலுங்கு, ஹிந்தியிலும் சில படங்களை நடித்து வருகிறார். குறிப்பாக ஹிந்தியில் சத்ரிவாலி என்ற படத்தில் காண்டம் பரிசோதனை செய்யும் நபராக நடித்துள்ளார்.
இந்த படம் அனுபவம் பற்றி ரகுல் கூறுகையில், ‛‛சத்ரிவாலி படத்தில் ஆணுறை சோதனையாளராக நடிக்கிறேன். படத்தில் நாங்கள் எதையும் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ காட்டவில்லை. ஒரு முத்த காட்சி கூட இல்லை. இது ஒரு சிறிய நகரம் பெண்ணின் பயணம். அவள் இந்த வேலையில் தடுமாறி அதை கேவலமாக பார்க்கிறாள் என்றார்.
பெண்களை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. விரைவில் ரிலீஸாக உள்ளது.