22 ஆண்டுகள் - குஷ்பு மகிழ்ச்சி
ADDED : 1332 days ago
நடிகை குஷ்பு கடந்த 2000ல் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று தனது 22வது திருமண நாளை கொண்டாடிய குஷ்பு, ‛‛என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கிறேன். இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்க்கை மகிழ்ச்சியானது. திருமண நாள் வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்'' என கணவர், மகள்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.