மறைந்த ரசிகர் முத்துமணி குடும்பத்திற்கு ரஜினி ஆறுதல்
ADDED : 1319 days ago
ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றத்தை நிறுவிய மதுரை ஏ.பி.முத்துமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி உயிரிழந்தார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .
இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தொலைபேசியில் முத்துமணியின் மனைவியை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வரமுடியவில்லை எனவும் விரைவில் உங்கள் குடும்பத்தை சந்திக்கிறேன். கவலை படாதீர்கள் எனவும் கூறியுள்ளார் . இந்த தொலைபேசி ஆடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .