சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்
ADDED : 1412 days ago
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார் . இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம் .
இந்நிலையில் இன்று சென்னை காளிகாம்பாள் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.