மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1298 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1298 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1298 days ago
‛மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை இயக்கும் படம் 'விக்ரம்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோருக்கு தனித்தனியாக தீம் மியூசிக்கை அனிருத் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 'விக்ரம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 36வது பிறந்தநாளான இன்று (மார்ச் 14) அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, காலை 7 மணியளவில் படம் வெளியீட்டு தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. வரும் ஜூன் 3ம் தேதி படம் வெளியாகும் என்பதை, படத்தின் மேக்கிங் வீடியோவை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
1298 days ago
1298 days ago
1298 days ago