கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியும்…
ADDED : 1565 days ago
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இன்று லோகேஷ் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் லோகேஷுக்கு கமல்ஹாசன் தெரிவித்த வாழ்த்து அவருக்கு பிறவி பலனை அளித்துள்ளது.
ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், என கமல் வாழ்த்தியுள்ளார்.
அதற்கு லோகேஷ், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே, என மகிழ்வுடன் பதிலாளித்துள்ளார்.