உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்தில் பிரியங்கா மோகன்

ரஜினி படத்தில் பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், அதையடுத்து சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன். இந்த படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அடுத்தபடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169ஆவது படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !