வெற்றிமாறனின் உதவி இயக்குனாரக மாறிய கருணாஸ்
ADDED : 1356 days ago
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள விடுதலை படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதற்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விரைவில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக கருணாஸ் இணைந்துள்ளார்.
இது குறித்து கருணாஸ் கூறுகையில் கிராமிய கானா பாடகராக என் கலையை வாழ்க்கையை தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும், அறிமுகத்தையும் கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்திருக்கிறேன். ஆற்றல்மிகு இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளேன். கடைசிவரை கற்றுக் கொள்வது தான் சினிமாவின் சிறப்பு. என்னை இணைத்துக்கொண்ட வெற்றிக்கு நன்றி என்றார்.