மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
1294 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1294 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1294 days ago
செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் தற்போது தொலைக்காட்சி தாண்டி சிறு சிறு ப்ராஜெக்ட்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது காதல் விவகாரம் இணையத்தில் வைரலானது. கலர்ஸ் தமிழ் 'இதயத்தை திருடாதே' நாயகன் நவீனும், கண்மணியும் தாங்கள் காதலித்து வரும் தகவலை சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், லைவ்வில் வந்த கண்மணி சேகர் இது தொடர்பில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அதில், 'என் வாழ்க்கையில் நடந்தது எல்லாமே எதிர்பாராதது தான். ஒருத்தரை கொண்டாடுவதும் வெறுப்பதும் அவரவர் விருப்பம். என்னை கொண்டாடுபவர்களுக்கு நன்றி. என்னை பிடிக்கவில்லையா ஓகே என்று கடந்துவிடுகிறேன். உங்களுடைய சப்போர்ட்டுக்கு நன்றி' என உருக்கமாக அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
அவர் இப்படி பேசியதற்கு காரணம் நவீன் தனது சக நடிகையான ஹீமா பிந்துவை திருமணம் செய்துகொள்வார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கண்மணியுடன் காதல் என்று அறிவித்தார். இதற்கிடையில் ஹீமா பிந்துவும் சமீப காலங்களில் சோகமான ஸ்டேட்டஸ்களை வைத்து வந்தார். இதனால் ஷாக்கான சில ரசிகர்கள் நவீனையும், கண்மணியையும் பற்றி நெகட்டிவாக பேசி வருகின்றனர். இதனால் தான் கண்மணி அந்த வீடியோவில் அப்படி பேசியுள்ளதாக தெரியவருகிறது.
ஆனால், நவீனும் பிந்துவும் ஆரம்பத்திலிருந்தே தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என்று கூறி வந்துள்ளனர். அப்படியிருக்க தேவையில்லாமல் சிலர் நவீன் மற்றும் கண்மணியை பற்றி நெகட்டிவாக பேசுவது தவறு என சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
1294 days ago
1294 days ago
1294 days ago