மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
1294 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1294 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், அதில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்லதொரு புகழை அடைந்திருக்கும் தொடர் பாக்கியலெட்சுமி. எதிர்பாராத திருப்பங்களுடன் கோபியின் ரகசியம், கோர்ட், விவாகரத்து, இரண்டாவது திருமணம் என தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தொடரின் நாயகியான சுசித்ரா, பாக்கியலெட்சுமி கதாபாத்திரத்திலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள சுசித்ரா, 'நான் சீரியலிலிருந்து விலகவில்லை. இப்போது கூட சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் புரமோஷனுக்கான வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. நான் விலகுவதாக வெளிவந்த தகவல் பொய்யானது' என கூறியுள்ளார்.
பாக்கியலெட்சுமி தொடரின் டிஆர்பிக்கு நாயகியாக நடிக்கும் சுசித்ராவும் முக்கிய காரணம். அவரது நடிப்பை பார்த்து பல இல்லத்தரசிகள் அவரை தங்கள் இன்ஸ்பிரேஷனாக நினைத்து வருகின்றனர். இதற்காக ஒருமுறை விஜய் டிவியில் சிறப்பு விழா நடத்தப்பட்டு அதில் சுசித்ரா கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1294 days ago
1294 days ago