மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1295 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1295 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1295 days ago
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வர வர மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது. ஹவுஸ்மேட்கள் அனைவரும் அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போட்டுக்கொள்வதுடன் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி, அல்லது அவதூறாக பேசி வருகின்றனர். முந்தைய சீசன்களில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி எப்போதாவது சண்டை போட்டுக்கொள்வர். ஆனால், அல்டிமேட்டில் சண்டை போடுவதையே கேம் டாஸ்க்காக செய்து வருகின்றனர். நேற்றைய முன்தினம் நிரூப் மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே பிரச்னை வெடித்தது.
இந்நிலையில் நேற்று நீரூப், ஜூலியை மோசமான கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டியுள்ளார். இதனால் ஜூலி அழுதுகொண்டே நிரூப்பிடம் சண்டை போடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பிக்பாஸ் வீட்டில் பொறுப்பே இல்லாமல் விளையாடி வரும், அதிலும் ஒரு பெண் போட்டியாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய நிரூப்பை ரெட் கார்டு கொடுத்த் வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
1295 days ago
1295 days ago
1295 days ago