கிரைம் திரில்லரில் 'முகமறியான்'
ADDED : 1297 days ago
சிவப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள் பட பாணியில், க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள முகமறியான் படத்தை அறிமுக இயக்குனர் சாய் மோரா இயக்கியுள்ளார். இயக்குனர் கூறுகையில், 'தயாரிப்பாளர் திலீப்குமார் வில்லனாகவும் இப்படத்தில் நடித்துள்ளார். ஆந்திர வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்திய போது பல சிரமங்களும், திகில் அனுபவங்களையும் சந்தித்தோம். காதல் ஏமாற்றங்களை சந்திக்கும் பொழுது அந்த வலிகளை உணரும் இதயங்களின் கண்ணீர் துளிகளை கதைகளமாக்கி இருக்கிறேன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிரண்குமார், திலிப் ஜெயின், ஒய்.ஜி.மகேந்திரன், அஸ்மிதா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்' என்றார்.