ராஜமவுலியின் அடுத்தடுத்த படங்கள்
ADDED : 1553 days ago
ராஜமவுலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் அடுத்தவாரம் உலகம் முழுக்க வெளியாகிறது. கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த இந்த படம் ஒருவழியாக திரையில் வெளியாக போகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் சுதந்திர போராட்ட காலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியானதும் ராஜமவுலியின் அடுத்த படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. அந்தவகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் ராஜமவுலி. அதை முடித்ததும் அல்லு அர்ஜூனை இயக்குகிறார். இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.