ஹன்சிகாவுக்கு ஏமாற்றம்
ADDED : 1296 days ago
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள 50வது படம் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு சற்றே நீண்ட சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். நீண்டகாலமாக தயாராகி வந்த இந்த படம் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இருப்பினும் சில பிரச்னைகளால் இந்த படம் முடங்கி உள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, ‛‛இது எனது 50வது படம். தாமதம் ஆவது வலிக்கிறது என்று கூற மாட்டேன். அதேசமயம் ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த பட கதையும், படமும் நன்றாக வந்துள்ளது. விரைவில் எல்லாம் சீராகும். படத்திற்கு சாதகமான சூழல் வரும். மீண்டும் சொல்கிறேன் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்'' என்றார்.