மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1293 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1293 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1293 days ago
அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது. தனுசுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. தனுசுக்கு வெற்றியும், விருதும் கிடைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அசுரனுக்கு பிறகு வெளிவந்த படங்களில் கர்ணன் மட்டுமே ஓரளவுக்கு தனுசை காப்பாற்றியது, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், ஜெகமே தந்திரம், மாறன், பாலிவுட் படமான அந்தராங்கி ரே என ஆகிய படங்கள் பெரிய அளவில் மக்களை கவரவில்லை. அதிலும் கடைசியாக அவரின் மூன்று படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. இதனால் வணிக ரீதியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் அடுத்து வெளிவர இருக்கிறது திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது.
திருச்சிற்றம்பலம் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த படத்தில் அதிகம் உள்ளது. தனுஷ், மித்ரன் ஜவஹர் கூட்டணி தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்திருக்கிறது. 7 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் என மூன்று கலர்புல் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். போதா குறைக்கு பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்கள். ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜோ படம் வருகிறது. வருகிற ஜூலை 1ம் தேதி படம் வெளிவரும் என்று தெரிகிறது.
1293 days ago
1293 days ago
1293 days ago