பார்த்திபனின் இரவின் நிழல் பட பர்ஸ்ட் லுக் வெளியானது
ADDED : 1341 days ago
பார்த்திபன் தனது 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் மூலம் அனைவரின் பாராட்டையும், கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இதையடுத்து இவர் இயக்கும் அடுத்தப்படத்தை புதுமுயற்சியாக ஒரே ஷாட்டில் இயக்கியுள்ளார். இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் .
இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறும் சிறப்பு வீடியோ காணொளியும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வீடியோவில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.