வாடிவாசல் படப்பிடிப்பு ஒத்திகையில் சூர்யா, வெற்றிமாறன்
ADDED : 1342 days ago
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தை தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சென்னை, ஈசிஆரில் நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் இது நடக்கிறது. இதற்காக 400 க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து படப்பிடிப்பிற்காக கொண்டு வந்துள்ளனர் . இந்த படப்பிடிப்பு ஒத்திகையில் சூர்யா , வெற்றிமாறன் , ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , தாணு ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது .