ஆர்ஆர்ஆர் தெலுங்கை விட ஹிந்தியில் நீளம் அதிகம்
ADDED : 1306 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் மார்ச் 25ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் மற்ற மொழிகளுக்கான சென்சார் மற்றும் பிரின்ட் சம்பந்தப்பட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர். தெலுங்கில் இந்த படம் மூன்று மணி இரண்டு நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகி இருக்கிறது.
அதேசமயம் ஹிந்தியில் இந்த படம் 3 மணி நேரம் 7 நிமிடங்கள் என்கிற அளவில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக படக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஹிந்திக்காகவே இந்த ஐந்து நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அதில் குறிப்பாக அஜய் தேவ்கன், ஆலியா பட் சம்பந்தப்பட்ட தெலுங்கில் இணைக்கப்படாத காட்சிகளை இதில் இணைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.