உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை: உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை: உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20வது படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதனை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜதிரத்னலு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சத்யராஜ், நவீன் பொலிஷெட்டி ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. தற்போது அதனை தயாரிப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

மரியா போலந்து - உக்ரேனிய திரைப்படமான ஈடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். படத்தில் வரும் வெளிநாட்டு ஹீரோயின் கேரக்டரில் மரியா நடிப்பதாகவும், இதுதவிர மேலும் ஒரு முக்கியமான ஹீரோயின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !