மகன்கள் அன்பு - ஐஸ்வர்யா நெகிழ்ச்சி
ADDED : 1292 days ago
நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு பயணி என்ற ஒரு வீடியோ ஆல்பத்தை இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினி. இந்த நிலையில் தற்போது அவர் தனது மகன்களான லிங்கா, யாத்ரா ஆகிய இருவரும் தனக்கு அன்பு முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதோடு, நேற்று உலக கவிதை நாள் என்பதால் ஒரு கவிதையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில், ‛‛என் வயிற்றில் இருக்கும்போது என்னை உதைத்தாய்... இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை ரசிக்கிறேன். அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை ஒன்று மட்டுமே. உங்களது ஒவ்வொரு வளர்ச்சிகளையும் பொக்கிஷமாக பார்ப்பேன்'' என தெரிவித்துள்ளார்.