உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா இசையமைத்த படத்திற்கு தணிக்கை குழு தடை

இளையராஜா இசையமைத்த படத்திற்கு தணிக்கை குழு தடை

இலங்கையில் நடந்த இறுதிபோரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்ரியாவின் வாழ்க்கையை 'போர்க்களத்தில் ஒரு பூ' என்ற பெயரில் இயக்கிய கு.கணேசன், தற்போது 'காதல் செய்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் மறுத்ததோடு படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான கு.கணேசன் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நான் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கியிருந்தேன். இது இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர். தணிக்கை குழுவை எதிர்த்து போராடி படத்தை வெளியிட்டேன்.

அந்த படத்திற்கு பிரச்னை செய்த அதே குழுவினர்தான் இப்போது காதல் செய் படத்தையும் பார்த்தனர். போர்க்களத்தில் பூ பட நேரத்தில் நடந்த பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு காதல் செய் படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க காதல் படம். இந்த பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன். என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !