டிடிக்கு வளைகாப்பா - உண்மை என்ன
ADDED : 1293 days ago
தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் டி.டி என்கிற திவ்யதர்ஷினி. டிடி தனது திருமண வாழ்வில் விவாகரத்து பெற்று கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் படங்களில் இப்போது தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், டிடிக்கு வளைகாப்பு நடைபெறுவது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதால், அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆனால், அது உண்மையான வளைகாப்பு நிகழ்ச்சி அல்ல. சுந்தர் சி இயக்கும் புதிய படமொன்றில் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் தான் டிடிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.