மேலும் செய்திகள்
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
1259 days ago
அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
1259 days ago
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குட்டி பத்மினி, அதன் பிறகு ரஜினி, கமல் காலத்திலும் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களை தயாரித்த அவர் 2014ல் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக பாஜகவில் குட்டிபத்மினி இடம்பெற்று வந்தபோதும் அரசியல் பணிகளில் அவர் பெரிதாக செயல்படவில்லை. இந்நிலையில் பா.ஜ.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் குட்டி பத்மினி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛பா.ஜ.க.வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். என் சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பா.ஜக,வின் நலம் விரும்பியாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.
1259 days ago
1259 days ago