தமன்னாவின் குத்தாட்டம் வைரல்
ADDED : 1292 days ago
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியதை அடுத்து தற்போது சிரஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் ரெஜினாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வருண் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள கானி என்ற படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலின் முழு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நான்கு நிமிடம் கொண்ட இந்த பாடல் சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனத்துக்கு இணையாக தமன்னாவும் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறார். ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த கானி படம் திரைக்கு வருகிறது.