அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகிறது
                                ADDED :  1319 days ago     
                            
                             2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்தபோது இஸ்ரோ மிகச் சிறப்பாக செயல்பட்டது.  இளைய தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அப்துல் கலாம் கடந்த 2007ல் மறைந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படம் ஆகப்போகிறது. பிரபல மலையாள இயக்குனர் ஸ்ரீ குமார் என்பவர் இயக்கயிருக்கும் இந்தப் படத்திற்கு விஞ்ஞானியன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்  வெளி யாகியுள்ளது. இந்த படத்தில் அப்துல் கலாம் ஆக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.