கன்னடத்தில் அறிமுகமாகிறார் அமிர்தா அய்யர்
ADDED : 1313 days ago
தமிழ், மலையாள படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அமிர்தா அய்யர் படைவீரன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு காளி, பிகில், வணக்கம்டா மாப்ள, லிப்ட் படங்களில் நடித்தார்.
ரெட் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் அதன்பிறகு ஹனுமான், அர்ஜூன பலகுனா, உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது கிராமயணா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பிரச்னைகள் காரணமாக தாமதமாகும் படம் இப்போது மீண்டும் சுறுசுறுப்படைய தொடங்கி உள்ளது. அமிர்தாவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.