மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1260 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1260 days ago
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெடுநல்வாடை படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி நாயர். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிக்க வந்தார். அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது அவர் விகரம் பிரபு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நெடுல்வாடை படம் வெளிவந்த உடன் நடிக்கத் தொடங்கிய படம் இது. கொரோனா காலத்தால் தாமதமாகி இப்போது வெளியாகி உள்ளது. அதனால் சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். டாணாக்காரன் படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ரைட்டராக நடித்திருக்கிறேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபுவை காதலிக்கிற மாதிரியான கதை. போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இயக்குனர் சொல்லியபடி நடித்தேன். கிளாமராக நடித்து பெயர் வாங்க விரும்பவில்லை. நல்ல சவாலான கதைகளில் நடித்து பெயர் வாங்கவே விரும்புகிறேன். என்றார்.
1260 days ago
1260 days ago