சாதனை படைத்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்!
ADDED : 1290 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் கொரோனா காலக்கட்டத்தில் முடித்து வைக்கப்பட்டது. எனினும், மக்களிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் சில காலங்கள் மொக்கையாக சென்ற திரைக்கதையால் இந்த தொடர் கைவிடப்படும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், முத்துராசாவின் கொலை, முத்துராசுவின் ரீ எண்ட்ரி, செந்திலின் டபுள் ஆக்சன் என மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதால் சீரியல் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் சேர்த்து மொத்தமாக 1000 எபிசோடுகளை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.